473. மும்பைத் தாக்குதல் - Update
இப்பதிவு, டிவி வழி செய்திகள் கிடைக்கப் பெறாதவர்களுக்காக, கடைசியாக வந்த தகவல்களின்படி,
1. தாஜ் ஹோட்டலில் ஒரு தீவிரவாதி சுற்றிக் கொண்டிருக்கிறான். கிட்டத்தட்ட 10-15 விருந்தினர்கள் மீட்கப்பட வேண்டும். 2 வெடிச் சத்தங்கள் கேட்டன.
2. டிரைடண்ட்-ஓபரா ஹோட்டலிலிருந்து 50-க்கும் மேற்பட்டவர், NSG கமேண்டோக்களின் காலை ஆப்பரேஷனின் முடிவில் மீட்கப்பட்டனர். Hats Off to NSG ! ஒரு 6 மாத இத்தாலிக் குழந்தையும் அதில் அடக்கம். பெரும்பாலானவர்கள் அயல்நாட்டவர் தான். சில பிணைக்கைதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஆபரேஷன் தொடர்ந்து கொண்ட்டிருக்கிறது. இன்னும் ஒரு 100 பேர் உள்ளே மாட்டிக் கொண்டிருக்கின்றனர்.
3. நாரிமன் இல்லத்தில், ஹெலிகாப்டர் மூலம் NSG / Naval கமேண்டோக்கள் காலையில் இறக்கி விடப்பட்டனர். மூன்றாம் தளத்தில் உள்ள தீவிரவாதிகளுடன் பயங்கரச் சண்டை நடந்து கொண்டிருக்கிறது. 4-5 இஸ்ரேலிய பிணைக்கைதிகள் இருக்கக்கூடும்.
4. இஸ்ரேல், இந்த கமேண்டோ ஆபரேஷனுக்குத் தேவையான (உத்திகள் சார்ந்த) ஆலோசனையையும், வேறு எந்த உதவியையும் தரத் தயாராக இருப்பதாக கூறியுள்ளது.
5. GoC தம்புராஜ், எல்லா இடங்க்களிலும் திட்டமிட்டபடி ஆப்பரேஷன் சென்று கொண்டிருப்பதாகக் கூறினார். எவ்வளவு கமேண்டோக்கள் கொல்லப்பட்டனர் என்ற தகவல் தர இயலாது என்றார். ஒரு NSG மேஜரும், சில வீரர்களும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்திய ராணுவ வழக்கப்படி, ஆபிசர்கள் முன்னின்று தங்கள் அணிவீரர்களை களத்தில் செலுத்துகின்றனர் !! இன்னும் இரண்டு மணி நேரத்தில் ஆபரேஷன் முடிவுக்கு வரும் என்று தெரிகிறது. தீவிரவாதிகள் டீஷர்ட் அணிந்த 25-30 வயதினர் என்று தெரிகிறது.
6. பலரும், ஏன் ஒரு 12-15 தீவிரவாதிகளைக் கொல்ல/பிடிக்க தீவிரப் பயிற்சி பெற்ற கமேண்டோக்களுக்கு இவ்வளவு நேரம் ஆகிறது என்று புரியாமல் கேட்கின்றனர். சரியாக திட்டமிடவும், சிவிலியன் உயிரிழப்பு அதிகம் ஏற்படாத வகையில் முன்னேறவும் வேண்டியிருப்பதால், நேரம் தேவைப்படுகிறது.
எது எப்படியோ, I SALUTE THESE UNSUNG, NAMELESS BRAVE AND COURAGEOUS MEN FROM THE NSG(ARMY) !! இந்த உண்மையான ஹீரோக்களை என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
எ.அ.பாலா
Also read: மும்பை பயங்கரம்
5 மறுமொழிகள்:
Test !
Trident update: நான் குறிப்பிட்ட 100 பேரும் மீட்கப்பட்டு விட்டனர், jsut now :) டிரைடண்ட் ஹோட்டல் முழுமையாக க்ளீன் என்று முதல்வர் கூறினார் !
//// பிஜேபி நடத்தும் தொடர் குண்டு வெடிப்புகள்
Latest News : மும்பையையும் இந்த நடு இரவில் ஹிந்து தீவிரவாதிகள் தாக்கியுள்ளதாக செய்திகள் வருகின்றன. பல நட்சித்திர ஹோட்டல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
http://tmpolitics.blogspot.com/2008/11/blog-post_86.html
///
இந்த மும்பைத் தாக்குதலை நடத்தியது பிஜேபி தானாம். தமிழ் இஸ்லாமிய இணைய தளங்க்ள் சொல்லுகின்றன. வெட்கம்!! வெட்கம்!!
நாம் கண்ணை மூடிக்கொண்டு இருக்கும்வரை தீவிரவாதத்தை தீர்க்க முடியாது. இஸ்லாமிய சகோதரர்கள் தீவிரவாதிகளை இஸ்லாத்துடன் இணைத்து அவர்களைக் காக்கும் இழி முயற்சியில் இருக்கும்வரை இந்தியாவில் அமைதி திரும்பாது.
நன்றி
ஜயராமன்
தூக்கமில்லா இரவுகள் எனக்கு:(
இப்போது டோண்டு ராகவன் இன்னும் ஒன்று கூற ஆசைப்படுவான்:
பாம்பாயில் குண்டுகள்வெடிக்கக் "கோவிந்தா-கோவிந்தா"க் கூப்பாடுகள் வலுவாகக் கேட்கின்றன.இலங்கையில் இத்தகையக் குண்டுகளை இலங்கை அரசே தமிழர்கள்மீது கொட்டும்போது அது,தேச ஒருமைப்பாட்டுக்கான-பயங்கரவாதத்துக்கெதிரான குண்டுகளெனச் சொல்லும் அக்கரகாரம் இங்கே நொந்து நூலாகிறது.
முற்பல் செய்தால் பிற்பகல் விளையுமென்றபடி...
மும்பையில் புகுந்த குண்டுதாரிகளோ,
இந்தியத் தேசத்தின் சமகால அரசியலுக்குக்கான அறுவடையாக
இந்திய மக்களுக்குக் கிடைத்தவர்கள்.
அவர்களின் வரவுடனேயே இந்த அமைதிப் பூங்கா குருதியாற்றில் மூழ்க,அதன் உரிமையாளர்கள் திருவாளர் டோண்டு மாமாவின் ஆலோசனைப்படி காரியமாற்றியதன் விளைவாகப் பணயக் கைதிகளாக வைக்கப்பட்ட"அப்பாவி மக்களை"இஸ்ரேலியக் கமாண்டோப்படையின் உதவியுடன் பாரதம் விடுவித்துள்ளது.
இஸ்ரவேலர்கள் மிகவுந் திறமையோடு இந்திய இராணுவத்தைப் பின்வாங்க வைத்துத் தமது தலைமையில் மும்பாய் நகரத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தார்கள். இஸ்ரவேலர்களின் இந்த வெற்றிகரமான தியாகத்துக்கு நன்றியைத் தெரிவிக்க,
திரு.டோண்டு மாமா (இஸ்ரேவேலர்களின் பாதங்களைத் தொட்டு வணங்க) தனது குடும்பத்தோடு மும்பாய் நோக்கி நாளை விரைகிறார்.கூடவே,துக்ளக் சோவும் டோண்டு மாமாவோடு பயணிக்க முடிவாகியுள்ளது.
மும்பாயில் திரு மோடியைச் சந்திப்பதும் இவர்களது பயணத்தில் முக்கியமான திட்டமாக இருப்பதால்,வரும் தமிழகத்தேர்தலில் புரட்சித்தலைவி ஜெயலலிதாவைத் தமிழகத்தின் முதல்வர் ஆக்கியபடி,
டெல்லியில் மோடி தலைமையில் ஆட்சியைக் கையளிக்க இத்தாலிய அரசுக்கு டோண்டு-சோ கமிஷன் ஆலோசனை கூறுகிறதாக இன்று ஜெயா டி.வி. தெரிவித்திருக்கிறது!
இதையிட்டு அக்கரகாரத்தில் பெரும் ஆரவாரம் பொங்க,பட்சிகள்-போண்டாக்கள் பொரித்து பில்டர்க் காப்பியோடு பரிமாறப்பட்டதாகத் தோழர் இட்லிவடை தெரிவித்துள்ளார்.
வரும் புதிய ஆண்டில் இந்திய இராணுவத்துக்கான இராணுவப் பயிற்சிகளை இஸ்ரவேலர்களின் இராணுவத் தளபதிகள் வழங்கவுள்ளார்கள்.
இலங்கை அரசுக்கும்-இராணுவத்துக்கும் இத்தகைய தளபதிகளின்மூலம் பயிற்சியை வழங்க இந்தியா இலங்கைக்கு ஆலோசனை செய்துள்ளதாக இன்று ஆகாசவாணீ அறிவித்துள்ளது.
எது,எப்படியாயினும்,திரு டோண்டு ராகவனின் காலத்துக்கேற்ற ஆலோசனையைக் குறித்து இந்திய நாடாளுமன்றதில் நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடவே, திரு.மோடியவர்களை இனிவரும் தேர்தலில் பிரதமராக்க வேண்டிய பாரிய பொறுப்பும் பாரத மக்களுக்கு இருப்பதாக தி இந்து ஆசிரியர் தலையங்கம் தீட்டியிருப்பதை நாம் கவனப்படுத்தித் திரு.டோண்டு அவர்களைப் பாராட்டுகிறோம்
http://oolam.blogspot.com/2008/11/blog-post.html
Post a Comment